அன்று கல்யாணி...இன்று செல்லத்துரை: மதுரை காமராஜ் பல்கலையில் தகுதியிழப்பு தொடருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அன்று கல்யாணி...இன்று செல்லத்துரை: மதுரை காமராஜ் பல்கலையில் தகுதியிழப்பு தொடருது

Updated : ஜூன் 15, 2018 | Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (2)
Advertisement
கல்யாணி,செல்லத்துரை,  மதுரை காமராஜ் பல்கலை, தகுதியிழப்பு, தொடருது

மதுரை:மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனத்தை நீதிமன்றம் ரத்து செய்துள்ளதுபோல், இப்பல்கலை மாஜி துணைவேந்தர் கல்யாணியும் இதுபோன்ற வழக்கில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பல்கலையில் 2013 - 2015 வரை துணைவேந்தராக கல்யாணி இருந்தபோது அவர் பல்கலை மானிய குழு விதிப்படி 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்ற வில்லை என முன்னாள் பேராசிரியர் ஒருவர் தொடர்ந்த வழங்கில் 2014ல் அவரது நியமனத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று, மீண்டும் ஓராண்டு வரை துணைவேந்தராக நீடித்தார். அவருக்கு பின் பேராசிரியர் முருகதாஸ் தலைமையில் புதிய துணைவேந்தர் தேடல் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இக்குழுவில் இடம் பெற்ற உறுப்பினர் பேராசிரியர் ராமசாமி ராஜினாமா செய்தது உட்பட பல்வேறு பிரச்னைகளால் புதிய துணைவேந்தர் நியமனத்தில் இழுபறி ஏற்பட்டது.

இதற்கிடையே உயர்கல்வி செயலாளர் தலைமையில் கன்வீனர் கமிட்டி அமைக்கப்பட்டு பல்கலை நிர்வாகம் செயல்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின் 27.5.2017ல் புதிய துணைவேந்தராக செல்லத்துரையை அப்போது இருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் நியமனம் செய்தார்.அப்போதே மாஜி துணைவேந்தர் கல்யாணி போல், செல்லத்துரை நியமனத்தில், யு.ஜி.சி., விதிப்படி 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும் என்ற தகுதி பின்பற்றப்படவில்லை என சர்ச்சை எழுந்தது.மேலும் துணைவேந்தராக கல்யாணி இருந்தபோது, முன்னாள் பேராசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட வழக்கில் செல்லத்துரை பெயரும் இடம் பெற்றுள்ளது என்ற சர்ச்சையும் ஏற்பட்டது. அப்பிரச்னையை அவர் சட்டரீதியாக சந்தித்தார்.

இதற்கிடையே அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, கல்லுாரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தான வழக்கில் இப்பல்கலை பேராசிரியர், ஆய்வு மாணவர் சிக்கிய விவகாரத்தில், சந்தானம் கமிஷன் மற்றும் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணையால் பல்கலை நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் செல்லத்துரை நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் அவரது நியமனம் செல்லாது என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


துணைவேந்தராக தொடர்வேன்

இத்தீர்ப்பு குறித்து செல்லத்துரை கூறிய தாவது: துணைவேந்தராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறேன். ஓராண்டாக பல்கலை வளர்ச்சிக்காக பல திட்டங்கள் மேற்கொண்டுள்ளேன். ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளுடன் 28 க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளேன். அனைத்து தகுதிகளும் எனக்கு உண்டு. நேர்காணலில் அதிக மதிப்பெண் பெற்றேன். தகுதி அடிப்படையில் தான் துணைவேந்தராக தேர்வு செய்யப் பட்டேன். வழக்கை சட்ட ரீதியாக வழக்கை சந்திப்பேன். இறைவன் மிகப் பெரியவன் என்பதில் மிகுந்த நம்பிக்கை எனக்கு உண்டு. மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தராக தொடர்வதில் சிக்கல் இல்லை, என்றார்.


மேல்முறையீடு செய்தால் அசிங்கம்

வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறியதாவது:செல்லத்துரை நியமனத்தை ரத்து செய்ய கோரி ஓராண்டிற்கு முன் தொடர்ந்திருந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. செல்லத்துரையை பல்கலை துணைவேந்தராக தமிழக அரசு சட்ட விரோதமாக தேர்வு செய்தது. அவரை விட தகுதியான மூத்த பேராசிரியர்கள் உள்ளனர். மேலும் பல்கலை துணைவேந்தர் தேர்வு குறித்த கமிட்டியை நியமித்து தேர்வு செய்யவில்லை. பணம் வாங்கி கொண்டு அவரை நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
உயர்நீதிமன்றம் உத்தரவையடுத்து அவரது நியமனம் ரத்தாகி விட்டது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் ஆதாரம் இருப்பதால் தான் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தால் அவருக்கு அசிங்கமாக போய் விடும். எனவே அவர் நியாயமுறையில் ராஜினாமா செய்ய வேண்டும். நீதியை தள்ளி போடலாம். ஆனால் நீதியை யாரும் விலைக்கு வாங்கி விட முடியாது. இதனால் தான் நீதிமன்றம் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர், என்றார்.


தகுதி அடிப்படையில்தான் தேர்வு செய்தேன்

செல்லத்துரையை பரிந்துரை செய்த மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் தேடல் குழு தலைவர் பேராசிரியர் முருகதாஸ் கூறியதாவது:தகுதி, அனுபவம் அடிப்படையில் தான் துணைவேந்தர் பதவிக்கு செல்லத்துரை பரிந்துரை செய்யப்பட்டார். நேர்காணல் வைத்து தான் அவரை கவர்னர் தேர்வு செய்தார். தற்போது சென்னை உயர் நீதிமன்றம் நியமனத்தை ரத்து செய்துள்ளது. மேல்முறையீடு காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாஜி துணைவேந்தர் கல்யாணி போல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது, என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
15-ஜூன்-201821:34:29 IST Report Abuse
ramasamy naicken துணை வேந்தர் பதவிக்கு பணம் வாங்கிவிட்டு நியமிக்கும் கலாசாரம் உடனே மாற வேண்டும். நூறு கோடிகள் வரை இந்த பதவிக்கு பேரம் பேசப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது என்பது ஊர் அறிந்த ரகசியம். செல்லத்துரை உடனே பதவியில் இருந்து விலக வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஜூன்-201807:33:01 IST Report Abuse
Bhaskaran கல்யாணியின் மாமனார் நடமாடும் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டவர் அவருக்கு அரசியல்வாதிகள் சிபாரிசு இருந்திருக்கலாம். செல்லத்துரை அவர்கள் ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தங்கள் போட்டிருந்தாராம், யாருடன் என்பதை உலகமே அறியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை