எய்ம்ஸ்: முடிவெடுக்க தேவை 3 மாதம் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

எய்ம்ஸ்: முடிவெடுக்க தேவை 3 மாதம் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை:தமிழகத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய இடம் தேர்வு செய்ய, மேலும் 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தது.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனைஅமைய உள்ளது அறிவிப்பை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட மனு செய்தேன். 2017 ஆக.,2 ல் நீதிபதிகள்,'மத்திய அரசின் நிபுணர் குழு அமைத்து, தமிழகத்தில் ஆய்வு செய்து 3 ஆண்டுகளாகிறது. மத்திய அரசுதான் விரைந்து முடிவெடுக்க வேண்டும்.'எய்ம்ஸ்' அமையும் இடம் குறித்து மத்திய அரசின் துணைக்குழு 2மாதங்களில், பிரதான நிபுணர் குழுவிற்கு அறிக்கை அளிக்கவேண்டும்.
அதன்படி 2017 டிச.,31 க்குள் நிபுணர் குழு இறுதி முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்,' என்றனர். இதைநிறைவேற்ற மத்திய சுகாதாரத்துறைச் செயலர்பிரீத்தி சுதன் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் மீது நீதிமன்றஅவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் மனு செய்தார்.
2018 பிப்.,14 ல் மத்திய அரசின் உதவி தலைமை வழக்கறிஞர்,''எய்ம்ஸ் அமைய மாநில அரசு பரிந்துரைத்ததோப்பூர் (மதுரை), பெருந்துறை (ஈரோடு), செங்கிப்பட்டி(தஞ்சாவூர்), செங்கல்பட்டு (காஞ்சிபுரம்) மற்றும் புதுக்கோட்டையில்மத்தியக்குழு ஆய்வு செய்தது. தகுந்த இடம் தேர்வு செய்ய, கால அவகாசம் தேவை,'' என்றார்.
நீதிபதிகள்: எய்ம்ஸ் அமையும்இடத்தை தேர்வு செய்து, மத்திய அரசு ஜூன் 14 க்குள்தெரிவிக்க வேண்டும். விசாரணை ஜூன் 26 க்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனர்.இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர்,'தேர்வுக்குழு கூட்டம் ஜூன் 18 ல் நடக்கிறது. மாநில அரசுபரிந்துரைத்தஇடங்களில் ஒன்றை குழு இறுதி செய்யும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மேலும் 3 மாதம்அவகாசம் தேவை,' என மனு செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X