பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் பேராசிரியர்கள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் பேராசிரியர்கள் வலியுறுத்தல்

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement

மதுரை:'சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஏற்று தார்மீக பொறுப்பேற்று துணைவேந்தர் பதவியை செல்லத்துரை ராஜினாமா செய்ய வேண்டும்,' என மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, கல்லுாரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக வெளியான ஆடியோ வழக்கில் இப்பல்கலை பேராசிரியர்கள் சிலர் சிக்கினர்.
நிர்மலா தேவி ஆடியோவில் குறிப்பிட்ட இப்பல்கலை பேராசிரியர்கள், அதிகாரிகள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராசிரியர் மற்றும் அலுவலர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, 'பதிவாளர் மற்றும் துணைவேந்தர் உத்தரவின்றி நாளிதழ், ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது,' என பல்கலை சார்பில் அவர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டு, அவர்களிடமிருந்து எழுத்து பூர்வ உறுதிமொழி கடிதங்களையும் தனித்தனியாக பெற்றுக்கொள்ளப்பட்டது.இதன் காரணமாக சென்னை நீதிமன்ற தீர்ப்பு குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:
மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் என்றாலே, சர்ச்சைகளும் வரிசை கட்டி வந்து விடுகின்றன. கல்யாணி துணைவேந்தராக இருந்தபோது அவருக்கு எதிராக பேராசிரியர்கள், அலுவலர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என நடத்தி பல்கலை வளர்ச்சி பாதித்தது.
அவருக்கு பின் செல்லத்துரை துணைவேந்தராக தேர்வு செய்யப்பட போகிறார் என்ற தகவல் கசியும்போதே பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. அவரது தகுதிகள் குறித்தும் சர்ச்சைகள் வெளியாகின. ஆனாலும் அவரே துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.செல்லத்துரை பதவியேற்று ஓராண்டு முடிந்ததை அடுத்து அரசியல் கட்சிகளை மிஞ்சும் அளவிற்கு அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விழாவில் பேசியவர்கள் அவரை துதி பாடி பாராட்டு மழையில் நனைத்தனர். இதை கண்ட நடுநிலை பேராசிரியர்கள் நொந்து கொண்டனர்.கல்வி நிலையங்கள் இதுபோன்று மாறுவதற்கு காரணம், துணைவேந்தர் தேர்வின்போது தகுதியானவர்களை வெளிப்படையாக நியமிக்க தவறுவது தான். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து தார்மீக பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
இப்பல்கலைக்கு நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் தகுதி மற்றும் நியமனத்தில் அடுத்தடுத்து சர்ச்சைகள் ஏற்படுவது ஒரு சாபக்கேடாக உள்ளது. வருங்காலங்களில் இது தவிர்க்கப்பட வேண்டும். அப்போது தான் கல்வி நிலையங்கள் கல்வி நிலையங்களாக இருக்கும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஜூன்-201807:53:37 IST Report Abuse
Bhaskaran Mவரதராசனார் மீனாக்ஷி சுந்தரனார் போன்ற நேர்மையான தூய்மையான சிம்மங்கள் அமர்ந்த அரியாசனத்தில் அல்லக்கை நரிகளை அமர்த்தினால் இப்படித்தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X