மழையால் வரத்து குறைவு கொத்தமல்லி கிலோ ரூ.80| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் வரத்து குறைவு கொத்தமல்லி கிலோ ரூ.80

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி:பழநி, கொடைக்கானல் பகுதியில் பெய்த மழையால், கொத்தமல்லி வரத்து குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.80க்கு விற்கிறது.திண்டுக்கல் மாவட்டம் பழநி பகுதியில் கடந்த சில நாட்களாக காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் கொத்தமல்லி விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் உழவர் சந்தைக்கு தினமும் 250 கிலோ முதல் 300 கிலோ வந்த கொத்தமல்லி கிலோ ரூ.30 வரை விற்றது. தற்போது 50 கிலோ முதல் 100 கிலோ வரை வருகிறது. இதனால் ஒரு கிலோ ரூ.80க்கு விற்கிறது. ரம்ஜான் பண்டிகையால் விலை மேலும் அதிகரிக்கும், என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை