8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு போர்வையாளர்களின் திட்டம் 'புஸ்' | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு போர்வையாளர்களின் திட்டம் 'புஸ்'

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை பயன்படுத்தி, விவசாயிகளை, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட செய்ய களமிறங்கிய, மாவோயிஸ்ட் ஆதரவு அமைப்புகளின் திட்டம், 'புஸ்' ஆனதாக, போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தில், சேலம் மாவட்டத்தில், 36.3 கி.மீ.,க்கு அமையவுள்ள பாதைக்கு, 29 கிராம விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இதுதொடர்பாக, கருத்து கேட்பு, ஆட்சேபனை தெரிவிக்க, நேற்று, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதில், மாவோயிஸ்டுகள் ஊடுருவி, அசம்பாவிதங்களை ஏற்படுத்தலாம் என, எச்சரிக்கப்பட்டதால், 300 போலீசார், கலெக்டர் அலுவலக நுழைவாயில் உள்பட பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டிருந்தனர்.நேற்று, விவசாயிகள் போர்வையில், போராட்டத்தை துாண்டுபவர்கள் ஊடுருவாமல் இருக்க, நுண்ணறிவு பிரிவு, கியூ பிரிவு, உளவுத்துறை உள்பட பல்வேறு உளவு அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால், மாவோயிஸ்ட் அமைப்புகளின் திட்டம், 'புஸ்' ஆனதாக, வருவாய்த்துறை, போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
இழப்பீட்டை அதிகரிக்க வலியுறுத்தல்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில்,' ஏழு கிராமங்களைச் சேர்ந்தவர்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், மாற்று வழியை ஏற்படுத்தி தர வேண்டும்' என மனுக்களை வழங்கினர். அரசு அறிவித்துள்ள இழப்பீடு தொகை போதாது என, சிலர் மனுக்களில் தெரிவித்திருந்தனர்.
பூலாவரி மக்களுடன் வந்த, முன்னாள் எம்.எல்.ஏ., செல்வம் கூறுகையில், ''ஒரு ஹெக்டேருக்கு, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக கூறுகின்றனர். இந்த இடங்கள், வெளிமார்க்கெட்டில், பல கோடி ரூபாய் மதிப்புடையவை. இதனால், பலரும் நிலத்தை தர முடியாது என, ஆட்சேபனை மனுக்கள் அளித்துள்ளோம். தொடர்ந்து, நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராடவுள்ளோம்,'' என்றார்.


- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X