போலி சமையல் எண்ணெய் ஆலை திருப்பூரில் 1.5 டன் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி சமையல் எண்ணெய் ஆலை திருப்பூரில் 1.5 டன் பறிமுதல்

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், போலி நிறுவனத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, 1.5 டன் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர், அரண்மனைப்புதுார் தெற்கு பகுதியில், சுரேஷ், 34, என்பவருக்குச் சொந்தமான உணவு எண்ணெய் மொத்த விற்பனை நிறுவனம் உள்ளது. இதில், நேற்று உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.அப்போது, பாமாயில் வாங்கி, கடலை எண்ணெய் என்று பேக்கிங் செய்து, விற்பனை செய்வது தெரிந்தது.
அட்டைப் பெட்டியில், போலியான முகவரி, திருப்பூரில் தயாரித்தாலும், காங்கயம், ஈரோடு, பல்லடம் ரோடு என முகவரிகளையும் மாற்றி, தரமற்ற கடலை எண்ணெய் தயாரித்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.எனவே, அங்கிருந்த, 1.5 டன் சமையல் எண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பாமாயில், போலி எண்ணெய் பாக்கெட் போட பயன்படுத்திய இரண்டு மெஷின்களுக்கு, 'சீல்' வைத்தனர்.உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'போலி சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டு, மாதிரி எடுத்து, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மெஷின்களுக்கு, சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு அடிப்படையில், உரிமையாளர் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில், வழக்குப்பதிவு செய்யப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஜூன்-201807:36:09 IST Report Abuse
Bhaskaran இவ்வளவுநாள் கழித்து பிடித்துள்ளனர் ஏதேனும் கொடுக்கல் வாங்கல் தகராறில் தற்சமயம் விழித்துக்கொண்டு விட்டார்களோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X