பொது அறக்கட்டளைகளை பாதுகாக்க வழிகாட்டுதல் உருவாக்க வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொது அறக்கட்டளைகளை பாதுகாக்க வழிகாட்டுதல் உருவாக்க வழக்கு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:பொது அறக்கட்டளைகளை பாதுகாக்க வழிகாட்டுதல்களை உருவாக்க குழு அமைக்க தாக்கலான வழக்கை, உயர்நீதிமன்றமதுரைக் கிளை ஒத்திவைத்தது.
திருச்சி வழக்கறிஞர் காந்தி தாக்கல் செய்த பொதுநல மனு:பொது அறக்கட்டளைகளில் நிர்வாகிகளாக குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள், தண்டனை பெற்றவர்கள் நியமிக்கப்படுகின்றனர். நிதி முறைகேடுகள், மோசடிகள் நடக்கின்றன.
தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க புகார் செய்யும்வகையில், தமிழகத்தில் தெளிவான வழிகாட்டுதல்இல்லை. பொது அறக்கட்டளைகள் மீது புகார் கொடுக்க, மகாராஷ்டிராவில் தனி கமிஷன் உள்ளது. தமிழகத்தில் சிவில் நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று நடவடிக்கைஎடுக்க வேண்டியுள்ளது.
பொது அறக்கட்டளைகளை பாதுகாத்து, மக்கள் நலன் கருதி சுமூகமாக இயங்கும் வகையில் தகுந்தவழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். அதற்கு நிபுணர் குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சட்டத்துறை செயலாளருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு காந்தி மனு செய்தார். நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வு ஜூன் 18க்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X