வழக்கறிஞர் கைது தடை நீட்டிப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வழக்கறிஞர் கைது தடை நீட்டிப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். சம்பவத்தின்போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பாக வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், ஹரிராகவன் உட்பட சிலர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.முன்ஜாமின் கோரி வாஞ்சிநாதன், ஹரிராகவன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தனர்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், ''போராட்டக்காரர்களை ஒருங்கிணைத்து, மனுதாரர்கள் வன்முறையை துாண்டினர்,''என்றார். நீதிபதி: மனுதாரர்களைகைது செய்யக்கூடாது என்ற உத்தரவு ஜூன் 18 வரை நீட்டிக்கப்படுகிறது என்றார். மேலும் சிலரின் முன்ஜாமின் மனுவும் ஜூன் 18க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை