மலையடிவாரத்தில் வெடி பொருட்கள் நக்சல்களுக்காக தயாராகுதா| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மலையடிவாரத்தில் வெடி பொருட்கள் நக்சல்களுக்காக தயாராகுதா

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருதுநகர்:மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள விருதுநகர் மாவட்டப் பகுதிகளில் தடை வெடிபொருட்கள், துப்பாக்கி பொருட்கள் கைப்பற்றப்பட்டநிலையில், இவைகள் நக்சல்களுக்காக உற்பத்தி செய்ய வாய்ப்புஉள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.
மாவட்டத்தில் தேவதானம், சேத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு பகுதிகள் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளன. இந்த மலை வழியாக சட்டீஸ்கர் மாநிலம் வரை செல்லலாம். சமீபகாலமாக இம்மலையில் வெடிபொருட்களுடன் வேட்டை கும்பல் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மலையடிவார கிராமங்களில் வெடிப்பொருட்கள், துப்பாக்கி தயாரிக்கும் பொருட்கள் அடிக்கடி கைப்பற்றுவது நடந்து வருகிறது.
இரு மாதம் முன் வத்திராயிருப்பு பகுதியில் கள்ளத்துப்பாக்கியுடன் இருந்த இருவரை மதுரை அவனியாபுரம் போலீசார் கைது செய்த நிலையில், நேற்று முன்தினம் சுந்தரராஜபுரத்தில் வெடிகுண்டு, துப்பாக்கி தயாரிக்கும் பொருட்கள் வைத்திருந்த இனியன், 24, ஜெயபாலன், 25, சேத்துார் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
வெடிபொருள் தயாரிப்போர் நக்சல்களுடன் தொடர்பில் உள்ளார்களா என்ற சந்தேகம் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதை கண்டு கொள்ளாமல் விட்டால் தமிழகத்தின் அமைதிக்கே கேள்விக்குறியாகும் சூழல் உருவாகும். இதன் மீது, நக்சல் தடுப்பு பிரிவு, கியூ பிராஞ்ச் போலீசார், வனத்துறையினர், தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை