செல்போன் டவரில் பேட்டரி திருடிய பெண் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செல்போன் டவரில் பேட்டரி திருடிய பெண் கைது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: சமயபுரம் அருகே செல்போன் டவரில், பேட்டரி திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.


திருச்சி, சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள செல்போன் டவரில்பேட்டரிகள் அடிக்கடி திருடு போனது. இதையடுத்து, டவரை செல்போன் நிறுவன பாதுகாவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். நேற்று மதியம் யாரும் இல்லாத நேரத்தில், செல்போன் டவர் பகுதிக்கு இரு பெண்கள் வந்தனர். அவர்கள் ஆள் யாராவது இருக்கிறார்களா என்று நோட்டமிட்டவாறு, அங்கிருந்த பேட்டரிகளை திருட முயன்றனர். அப்போது அங்கிருந்த பாதுகாவலர், இருவரையும் கையும், களவுமாக பிடித்தார். ஒரு பெண் அவரிடமிருந்து தப்பியோடி விட்டார். சிக்கிய பெண்ணை பாதுகாவலர் சமயபுரம் போலீசில் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திருச்சி தாராநல்லூரைச் சேர்ந்த மீனாட்சி, 40, என்பதும், இதுவரை, 10க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களில் பேட்டரி திருடியதும், தெரியவந்தது. அவரை சமயபுரம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை