தேனியில் நாய்களுக்கு 'பார்வே' வைரஸ் பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனியில் நாய்களுக்கு 'பார்வே' வைரஸ் பாதிப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி:தேனி, திண்டுக்கல்லில் 'பார்வே' வைரஸ் நோயால் நாய்க்குட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன.தேனி, ஆண்டிபட்டி, கம்பம் மற்றும் திண்டுக்கல்லில் தட்ப வெட்ப நிலை மாற்றத்தால் ஒரு வயதிற்கு உட்பட்ட நாய்க்குட்டிகளை 'பார்வோ' வைரஸ் தாக்கி வருகிறது.
ஜாதி, ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், பிட்சஸ் பொமரேனியன், லாப்ரட்டார் உள்ளிட்ட வெளிநாட்டு இனநாய் குட்டிகளுக்கு வைரஸ் பாதிப்பு பரவுகிறது. அவை உணவு சாப்பிடாது. வயிற்று கழிச்சல் ஏற்படும். எடை குறையும். படுத்தே இருக்கும். குடல் புண்கள் உண்டாகும். கழிவுடன் ரத்தம் வந்து ஓரிரு நாட்களில் இறந்துவிடும்.
தேனி டாக்டர் ஐஸ்வர்யா கூறியதாவது:வெயில், மழை என அடுத்தடுத்து பருவநிலை மாற்றம், அதிகதுார பயணம், இடம் விட்டு இடம் மாறுதல் உள்ளிட்ட காரணங்களால்' பார்வோ 'வைரஸ் பரவுகிறது. நாய் குட்டிகள் பிறந்த 42 வது நாளில் தடுப்பூசி போட்டு வளர்த்தால் பாதுகாக்கலாம். 3வது மாதத்தில் வெறிநோய் தடுப்பூசி போட வேண்டும். வீட்டில் வளரும் நாட்டு நாய், பூனைகளும் இதில் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது, என்றார்.
தேனி கால்நடை துறை இணை இயக்குனர் விஜயகுமார் கூறியதாவது:இந்த வைரசாஸ் ஆடு, மாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நாய்க்குட்டி வளர்ப்போர் தடுப்பூசி போட வேண்டும், என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை