பெரியாறு அணையில் இன்று துணைக்குழு ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் இன்று துணைக்குழு ஆய்வு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கூடலூர்:முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து இன்று துணைக் குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
தென்மேற்கு பருவமழையால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 126.7 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. அணைக்கு நீர்வரத்து 2,908 கன அடியாகவும், தமிழகப்பகுதிக்கு நீர்திறப்பு 1,400 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 3,985 மில்லியன் கன அடியாகும். பெரியாறில் 28.2 மி.மீ., தேக்கடியில் 16.2 மி.மீ., மழை பதிவானது.
நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்தும், ஜூன் 21 ல் மூவர் குழு ஆய்வு செய்ய வருவதாலும், இன்று மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் ராஜேஷ் தலைமையிலான துணைக்குழு அணையில் ஆய்வு செய்கின்றனர். இக்குழுவில் தமிழக பிரதிநிதிகளாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி கோட்ட பொறியாளர் சாம் இர்வின், கேரள அரசு பிரதிநிதிகளாக நீர்ப்பாசனத்துறை உதவி செயற்பொறியாளர் ஷாஜி ஐசக், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர். இன்று மாலை குமுளியிலுள்ள கண்காணிப்புகுழுவின் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X