கள்ளக்காதல் விவகாரத்தில் கொடூரம்: ஆட்டோ டிரைவரை வெட்டி கொலை செய்த கூலிப்படை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்காதல் விவகாரத்தில் கொடூரம்: ஆட்டோ டிரைவரை வெட்டி கொலை செய்த கூலிப்படை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சேலம், அழகாபுரம் பெரியபுதூர் சாலையில், கள்ளக்காதல் விவகாரத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரை, கூலிப்படையினர் வெட்டி கொலை செய்தனர்.
சேலம், அழகாபுரம், பெரியபுதூர் சாலையை சேர்ந்த ராஜா மகன் கோபாலகிருஷ்ணன், 36. இவரின் மனைவி மங்கையர்க்கரசி, 32. இவர்களுக்கு, இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். ஆட்டோ டிரைவரான கோபாலகிருஷ்ணன், தி.மு.க.,வில் உறுப்பினராக உள்ளதோடு, வீரபாண்டி ராஜாவின் தீவிர ஆதரவாளர். அந்த பகுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி ஜோதி, 39. வெங்கடேசன், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இரண்டு மகன்களுடன் ஜோதி தனியாக வசித்து வந்தார். ஜோதிக்கும், கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை ஜோதியின் மகன் உலகநாதன், 20, கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரும் கள்ள தொடர்பில் இருந்தனர். இதனால், கோபால கிருஷ்ணனுக்கும், உலக நாதனுக்கும் இடையே பகை ஏற்பட்டது. நேற்று மதியம், 3:10 மணிக்கு, தன் வீட்டுக்கு வந்த கோபாலகிருஷ்ணனை, கூலிப்படை உதவியுடன் வெட்டி சாய்த்து விட்டு, உலகநாதன் தலைமறைவாகி விட்டார். அழகாபுரம் போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு, உலகநாதன் உட்பட, கூலிப்படையை சேர்ந்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை