'குழந்தை கடத்தல் வதந்தியை நம்ப வேண்டாம்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'குழந்தை கடத்தல் வதந்தியை நம்ப வேண்டாம்'

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: 'குழந்தை கடத்தல் வதந்தியை, மக்கள் நம்ப வேண்டாம்' என, கலெக்டர் ரோகிணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: குழந்தை கடத்தல் குறித்து, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மக்கள், அத்தகவல் பரப்புவோரை கண்டறிந்தால், போலீசில் புகாரளிக்கலாம். சந்தேகப்படும் வகையில் நடமாடுபவர்களை, கடத்தல்காரர்கள் என நினைத்து தாக்குவது, பல மாவட்டங்களில் நடக்கிறது. இதில், அப்பாவி மக்கள் பாதிக்கின்றனர். அதுபோன்ற நபர்களை பிடித்தால், தாக்காமல், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சேலம் ஊரக உட்கோட்டம் - 94981 00980, சங்ககிரி - 94981 00971, ஆத்தூர் - 94981 00972, மேட்டூர் - 94981 00973, ஓமலூர் - 94981 00974, வாழப்பாடி உட்கோட்டம் - 94981 00975, சேலம் தனிப்பிரிவு அலுவலகம் - 0427 - 2272929 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

* ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில், டி.எஸ்.பி., பொன்கார்த்திக்குமார் பேசினார். அதில், ''குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரவுகிறது. யார் மீதேனும் சந்தேகம் ஏற்பட்டால், அவர்களை பிடித்து, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும். யாரையும் அடிக்க வேண்டாம். தவறான தகவல், வாட்ஸ்ஆப்பில் அனுப்பியவர் மற்றும் தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை