சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆத்தூர்: ஆத்தூரில், வட்டார போக்குவரத்து துறை சார்பில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம், அதன் மன்ற தொடக்க விழா, நேற்று நடந்தது. அதில், சேலம் கலெக்டர் ரோகிணி பேசியதாவது: தமிழகத்தில் முதல் முறையாக, ஆத்தூர், ஆறகளூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 25 மாணவர்களை கொண்ட சாலை பாதுகாப்பு மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. விபத்தில்லா மாவட்டமாக மாற்ற, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெற்றோருக்கு, அவர்களது குழந்தைகள், விழிப்புணர்வு செய்வதால், தலைக்கவசம் அதிகளவில் அணிந்து செல்கின்றனர். மாணவர்கள், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, மன்ற மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. பின், மாணவர்களின் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடந்தது.
காலில் விழுந்து மூதாட்டி கதறல்: கலெக்டர் ரோகிணியின் காலில் விழுந்த மூதாட்டி ராஜாமணி, 68, 'முதியோர் உதவித்தொகை கேட்டு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கையில்லை' எனக்கூறி கதறி அழுதார். அதேபோல் மாற்றுத்திறனாளி மணி உள்பட மூவர் மனு அளித்தனர். உடனடியாக, உதவித்தொகை உத்தரவு வழங்க, ஆர்.டி.ஓ., செல்வனுக்கு, ரோகிணி உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை