தறித்தொழிலாளி கொலை வழக்கு: மூவருக்கு காப்பு; 2 பேருக்கு வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தறித்தொழிலாளி கொலை வழக்கு: மூவருக்கு காப்பு; 2 பேருக்கு வலை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

வீரபாண்டி: கள்ளக்காதல் விவகாரத்தில், தறித்தொழிலாளியை கொன்ற மூவரை, போலீசார் கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.
சேலம், ஆட்டையாம்பட்டி அருகே, முத்தனம்பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 43; திருமணமாகாத தறித்தொழிலாளி. அருகேவுள்ள, கோணங்காட்டைச் சேர்ந்தவர் சரவணன், 38. இவரது மனைவி தனலட்சுமி. இவருக்கும், சக்திவேலுக்கும், கள்ளத்தொடர்பு இருந்தது. இதில், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, சக்திவேல் அடித்துக் கொலை செய்யப்பட்டார். நேற்று மதியம், ஆட்டையாம்பட்டி போலீசார், எஸ்.பாலம் அருகே, வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கொலை வழக்கில் தொடர்புடைய, சரவணன், 38, அவரது உறவினர்கள் மணிகண்டன், 31, கனகு, 30, ஆகியோரை, போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: சக்திவேல், தனலட்சுமி இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால், சரவணன் - தனலட்சுமி இடையே, கடந்த மாதம் தகராறு ஏற்பட்டது. அதில், கோபித்துக்கொண்ட தனலட்சுமி, தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதுகுறித்து, சரவணன் கடந்த, 7ல் அளித்த புகார்படி, கொண்டலாம்பட்டி மகளிர் போலீசார், இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சரவணனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என, தனலட்சுமி கூறினார். இதனால், நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று பிரிந்துவிடுங்கள் எனக்கூறி அனுப்பினர். இதில் ஆத்திரமடைந்த சரவணன், உறவினர்கள் மணிகண்டன், கனகு, சேட்டு, சேகர் ஆகியோருடன் சேர்ந்து, நேற்று முன்தினம், சக்திவேலின் கழுத்தை நெரித்து, தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்தார். இவ்வாறு அவர்கள் கூறினர். சேட்டு, சேகர் ஆகியோரை, போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை