பூட்டிய வீட்டில் வாலிபர் மர்மச்சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூட்டிய வீட்டில் வாலிபர் மர்மச்சாவு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: பூட்டிய வீட்டில், மர்மமாக இறந்து கிடந்த வாலிபரின், அந்தரங்க உறுப்பை, பூனை கடித்து குதறியது. சேலம், குமாரசாமிப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரபாபு மகன்கள் தீபக் சக்கரவர்த்தி, 37, மது சக்கரவர்த்தி, 33. ராஜேந்திரபாபு இறந்த நிலையில், தீபக் சக்கரவர்த்தி, சென்னையிலுள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். மது சக்கரவர்த்திக்கு திருமணமாகவில்லை. அவர், சேலத்திலுள்ள இரு வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதன் ஒரு வீட்டின் மாடியில், அவர் வசித்து வந்தார். கடந்த, 11ல், தீபக்சக்கரவர்த்தி, தம்பிக்கு போன் செய்தார். அவர், மொபைலை எடுக்கவில்லை. இரு நாட்களாக தொடர்பு கொண்டும், அவர் எடுக்காததால், நேற்று முன்தினம் இரவு, வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள், மாடிக்கு சென்று பார்த்த போது, வீடு உட்புறம் தாழிடப்பட்டிருந்தது. மேற்பகுதி யில் உள்ள துவாரம் வழியாக பார்த்தபோது, மது சக்கரவர்த்தி, நிர்வாண நிலையில், படுக்கையில் இறந்து கிடந்தது தெரிந்தது. இதுகுறித்து, அவர்கள், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்த போது, அவரது அந்தரங்க உறுப்பை பூனை கடித்து குதறியிருந்தது தெரிந்தது. இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X