தற்கொலைக்கு தூண்டிய தந்தை, மகனுக்கு காப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலைக்கு தூண்டிய தந்தை, மகனுக்கு காப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வாழப்பாடி: பெண்ணை, தற்கொலைக்கு தூண்டிய தந்தை, மகனை, போலீசார் கைது செய்தனர். வாழப்பாடி அருகே, சிங்கிபுரம், மேலக்காட்டைச் சேர்ந்த பெரியசாமி மனைவி மொட்டையம்மாள், 65. அதே பகுதியைச் சேர்ந்த, அவரது உறவினர் விவசாயி கருப்பண்ணன், 55. இவர்களிடையே, முன்விரோதம் இருந்தது. கடந்த, 8ல், மொட்டையம்மாள், அதே பகுதியிலுள்ள, சின்னுசாமிக்கு சொந்தமான விவசாய கிணற்றில், சடலமாக கிடந்தார். கருப்பண்ணன் தரப்பினர் தரக்குறைவாக திட்டியதால், மொட்டையம்மாள், கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவரது மகன் பரமசிவம், வாழப்பாடி போலீசில் புகாரளித்தனர். இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக, கருப்பண்ணன், அவரது மகன்கள் வெங்கடேசன், 32, முருகேசன், 27, உறவினர்கள் ஜெயந்தி, 45, வீரமுத்து, 45, குமார், 43, உள்பட, ஆறு பேர் மீது வழக்குப்பதிந்தனர். விசாரித்த போலீசார், நேற்று, கருப்பண்ணன், முருகேசன் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை