சேலம், ஈரோடு ரயில்கள் இன்று முதல் ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேலம், ஈரோடு ரயில்கள் இன்று முதல் ரத்து

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: தண்டவாள பராமரிப்பு பணியால், சேலம் - கோவை, சேலம் - ஈரோடு ரயில்கள், இன்று முதல், ஜூலை, 3 வரை ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை: மகுடஞ்சாவடி - வீரபாண்டி, மாவெலிபாளையம் - மகுடஞ்சாவடி, சங்ககிரி - மாவெலிபாளையம் இடையே, தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அதனால், கோவை - சேலம், சேலம் - கோவை; ஈரோடு - சேலம், சேலம் - ஈரோடு பயணிகள் ரயில் இயக்கம், இன்று முதல், ஜூலை, 3 வரை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. ஐதராபாத் - கொச்சுவேலி வாராந்திர ரயில், 17ல், 20 நிமிடம், ஜூலை, 1ல், 30 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். பிலாஸ்பூர் - எர்ணாகுளம் வாராந்திர ரயில், 19 மற்றும் ஜூலை, 3ல், 35 நிமிடம்; ஆலப்புழா - டாடா (ஜார்க்கண்ட்) விரைவு ரயில், 19ல், 75 நிமிடம், 22ல், 125 நிமிடம், 23, 29, 30ல், 95 நிமிடம்; எர்ணாகுளம் - பெங்களூரு சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில், 19ல், 65 நிமிடம், 22ல், 50 நிமிடம், 23ல், 105 நிமிடம், 29, 30ல், 75 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். பிலாஸ்பூர் - திருநெல்வேலி சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில், 20ல், 80 நிமிடம்; திருவனந்தபுரம் - மும்பை விரைவு ரயில், 20ல், 70 நிமிடம், 30ல், 45 நிமிடம்; கோவை - சென்னை எக்ஸ்பிரஸ், 23ல், 25 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை