'பாஸ்' வழங்கக்கோரி டிரைவர்கள் முற்றுகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பாஸ்' வழங்கக்கோரி டிரைவர்கள் முற்றுகை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தலைவாசல்: பாஸ் வழங்கக்கோரி, நத்தக்கரை சுங்கச்சாவடியை, டிரைவர்கள் முற்றுகையிட்டனர். தலைவாசல், நத்தக்கரை, சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி உள்ளது. அங்கு, ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு, 150 ரூபாயில் வழங்கப்படும், 'பாஸ்' வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அது, மாதம், 1,500 ரூபாய் என, கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தெரிகிறது. தற்போது, பாஸ் இல்லாததால், ஒரு நடைக்கு, 70 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால், சிரமத்துக்கு ஆளாகினர். இதைக் கண்டித்து, பழைய கட்டணத்தில், பாஸ் வழங்கக்கோரி, நேற்று மதியம், உள்ளூர் டிரைவர்கள், சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர். அப்போது, நிர்வாகத்திடம் பேசி தீர்வு காண, மூன்று நாள் அவகாசம் வழங்குமாறு ஊழியர்கள் கேட்டனர். அதற்கு ஒப்புக்கொண்டு, டிரைவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை