பராமரிப்பு பணி தொடக்கம்: 2 கனஅடி நீர் வெளியேற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பு பணி தொடக்கம்: 2 கனஅடி நீர் வெளியேற்றம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர் அடுத்த, பாப்பநாயக்கன்பட்டி, கரியகோவில் அணையில், நேற்று, நீர்மட்டம், 21.06 அடி உயரத்தில், 33.74 மில்லியன் கன அடி நீர் உள்ளது. ஷட்டர் வழியாக அனுமதிக்கப்பட்ட அளவை விட, கூடுதலாக தண்ணீர் கசிவு ஏற்பட்டது. இதனால், தென்மேற்கு பருவ மழைக்கு முன், ஷட்டர் பழுது மற்றும் பராமரிப்பு பணி, நேற்று தொடங்கப்பட்டது. பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது: அணையில் தண்ணீர் திறக்க, இரு ஷட்டர் உள்ளது. ஒன்றில், அவசரகால கதவு இல்லை. ஷட்டர் பகுதியிலுள்ள ரப்பர் பீடிங் தேய்மானம் இருந்ததால், தண்ணீர் கசிவு இருந்தது. மற்றொன்றில், புதிதாக அவசர கால கதவு, ரப்பர் பீடிங் பராமரிப்பு பணிக்கு, எட்டு லட்சம் ரூபாய், தமிழக அரசு ஒதுக்கியது. ஐந்து நாட்களுக்கு, பணி மேற்கொள்ளப்படும் என்பதால், ஷட்டர் வழியாக, வினாடிக்கு இரண்டு கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை