சுற்றித்திரிந்த மாணவன் போலீசில் ஒப்படைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றித்திரிந்த மாணவன் போலீசில் ஒப்படைப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி, திவ்யா தியேட்டர் பின்புறமுள்ள ஒரு வீட்டில், நேற்று மாலை, மர்ம நபர் புகுந்தார். வீட்டிலுள்ளவர்கள் கூச்சலிட, மக்கள் திரண்டுவந்து அவனை பிடித்து, கொண்டலாம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம், பாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்த முருகன் மகன் பிரசாத், 20, பிளஸ் 2 முடித்தவர். மனநலம் பாதிக்கப்பட்ட அவர், சென்னை செல்வதாக கூறி, சேலம் வந்துள்ளார். இதுகுறித்து, அவரது பெற்றோர், கோவில்பட்டி மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கொண்டலாம்பட்டி போலீசார், அந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உறவினர்கள், மாணவரை அழைத்துச்செல்ல, போலீசாருடன், சேலம் வரவுள்ளனர். இன்று, மாணவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை