போலீசில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீசில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குடியாத்தம்: போலீஸ் வேலை வாங்கித் தருவதாக, 20 பேரிடம், 20 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம், நடுப்பேட்டையைச் சேர்ந்தவர் உமாபதி, 60; போலீஸ் வேலை வாங்கித் தருவதாக, சத்துவாச்சாரி கார்த்திக், 27, குடியாத்தம் மணிகண்டன், 23, உட்பட, 20 பேரிடம் தலா, ஒரு லட்சம் ரூபாய் வீதம், 20 லட்சம் ரூபாய், கடந்தாண்டு வாங்கினார். வேலை வாங்கித் தராததால், பணத்தைத் திருப்பித் தருமாறு, உமாபதியிடம், அனைவரும் கேட்டனர். அப்போது அவர், அனைவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின்படி, குடியாத்தம் போலீசார், அவரை, நேற்று கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை