ஆசிரியர் மாற்றத்தை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் மாற்றத்தை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பத்தூர்: ஆசிரியரை, வேறு பள்ளிக்கு மாற்றியதால், மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து, போராட்டம் நடத்தினர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், வேலன்நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், பணியாற்றி வந்த ஆங்கில ஆசிரியர் முருகன், 40. இவரின் கற்பித்தல், பழகும் விதம், அனைத்தும் மாணவர்களுக்கு பிடித்துப்போனது. இந்நிலையில், ஆசிரியர் முருகன், வாணியம்பாடி அருகே, ஓமகுப்பம் பள்ளிக்கு பணிமாறுதல் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு, நேற்று காலை, 10:00 மணிக்கு, அவருக்கு கிடைத்தது. இதைக்கண்டித்து, பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும், காலை, 10:30 மணிக்கு வகுப்புகளை புறக்கணித்து, தர்ணாவில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் கல்வி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக, அவர்கள் உறுதியளித்தனர். இதை ஏற்காத மாணவர்கள், வீட்டுக்கு சென்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை