தொழில் போட்டியால் சாராய வியாபாரி கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழில் போட்டியால் சாராய வியாபாரி கொலை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பேர்ணாம்பட்டு: தொழில் போட்டியால், சாராய வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த, கோட்டைசேரியைச் சேர்ந்தவர் பங்களாராஜ், 70. இவரது, மகன் அசோக்குமார், 62. இருவரும், அங்குள்ள தென்னந்தோப்பில், சாராயம் காய்ச்சி விற்று வந்தனர். பேர்ணாம்பட்டுக்கு அருகே, ஆந்திர மாநிலம், வி.கோட்டா மலையில், ரெட்டி குரூப்பைச் சேர்ந்தவர்கள், சாராயம் காய்ச்சி விற்றுக் கொண்டிருந்தனர். ஆந்திர வியாபாரிகளை விட, குறைந்த விலைக்கு, அசோக்குமார் விற்பனை செய்ததால், இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று காலை, பங்களாராஜ் சாராயம் விற்பனை செய்ய சென்று விட்டார். தென்னந்தோப்பில் உள்ள, குடிசை வீட்டில் அசோக்குமார் தூங்கிக் கொண்டிருந்தார். மாலை, 4:00 மணி வரை, அவர் வெளியே வராததால், குடிக்க வந்த சிலர், குடிசைக்குள் சென்று பார்த்தனர். அங்கு, ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தார். புகாரின்படி, பேர்ணாம்பட்டு போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில், தொழில் போட்டியால், அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது, தெரியவந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை