சந்தேகத்தால் மூதாட்டியை அடித்து கொன்ற மூன்று பேருக்கு 'குண்டாஸ்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சந்தேகத்தால் மூதாட்டியை அடித்து கொன்ற மூன்று பேருக்கு 'குண்டாஸ்'

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தி.மலை: குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து, மூதாட்டியை அடித்து கொலை செய்த சம்பவத்தில் கைதான, 44 பேரில், மூன்று பேர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னையை சேர்ந்த ருக்மணி, 65. இவரது உறவினர்கள் மோகன்குமார், சந்திரசேகர், கஜேந்திரன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர், கடந்த, 9ல், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியில் உள்ள, குல தெய்வ கோவிலுக்கு சென்றனர். தம்புகொட்டான்பாறையில், சிறுமிகளுக்கு, சாக்லெட் கொடுத்து, வழி கேட்டனர். இதைக்கண்ட, அப்பகுதி மக்கள், குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து தாக்கியதில், ருக்மணி இறந்தார். புகாரின்படி, போளூர் போலீசார், களியம், தம்புகொட்டான்பாறை, ஜம்பங்கிபுரம், காமாட்சிபுரம், கணேசபுரம், அத்திமூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த, 62 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 44 பேரை கைது செய்தனர். இதில், தம்புகொட்டான்பாறையை சேர்ந்த, முத்து மகன் சிவா, 29, அத்திமூரை சேர்ந்த, வெங்கடேசன் மகன் மணிகண்டன், 36, சாமிநாதன் மகன் பாபு, 54, ஆகியோரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., பொன்னி, கலெக்டர் கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின்படி, மூன்று பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். சிறையில் உள்ள மூவரிடமும், அதற்கான நகல் வழங்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை