விலங்குகள், பறவைகள் வேட்டையாடிய நான்கு பேர் கைது: துப்பாக்கிகள் பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விலங்குகள், பறவைகள் வேட்டையாடிய நான்கு பேர் கைது: துப்பாக்கிகள் பறிமுதல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, வனப்பகுதியில், வன விலங்குகளை வேட்டையாடிய, நான்கு பேரை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து, இரண்டு நாட்டுத் துப்பாக்கியை, பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த, ராதாபுரம் மற்றும் கவுத்திமலை காப்புக்காட்டில், வன விலங்குகளை, சிலர் வேட்டையாடுவதாக, மாவட்ட வன அலுவலர் அர்ச்சனா கல்யாணிக்கு தகவல் கிடைத்தது. வனச்சரகர்கள் மனோகரன் மற்றும் செந்தில் தலைமையில், 30 பேர் கொண்ட வனத்துறையினர், இரு குழுக்களாக கடந்த, இரண்டு நாட்களாக, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மான் வேட டையாடிய, வேடந்தோப்பு அசோக்குமார், 34, என்பவரை பிடித்து, இறந்த மானின் உடல், ஒரு நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அதேபோல், ராதாபுரம் காப்புக்காடு பகுதியில், காட்டுப்பூனை, மற்றும் கோட்டான் பறவையை வேட்டையாடிய, தொண்டாமுத்தூர் ராஜதுரை, 21, பிரசாந்த், 25, சதாகுப்பம் மாரியப்பன், 43, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, ஒரு புள்ளி மான், இரண்டு காட்டுப் பூனை, ஒரு கோட்டான் பறவை ஆகியவற்றின் உடல்கள் மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை