7,841 யூனிட் ரத்தம் சேகரிப்பு: மருத்துவ அதிகாரி தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

7,841 யூனிட் ரத்தம் சேகரிப்பு: மருத்துவ அதிகாரி தகவல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஆண்டில், 97 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம், 7,841 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது,'' என்று மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அசோக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய, இரண்டு அரசு மருத்துவமனைகளில், ரத்த சேமிப்பு வங்கி உள்ளது. இதன் மூலம், கடந்த ஆண்டில், 97 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு, 7,841 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளது. தற்போது, 62 நாடுகளில் பணம் இல்லாமல், ரத்தம் பெற்று, தன்னிறைவு அடைந்துள்ளது. 40 நாடுகளில் ரத்தத்தை குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்தோ, பணம் கொடுத்தோ வாங்க வேண்டிய நிலை உள்ளது. வரும், 2020க்குள் அனைத்து நாடுகளிலும், தேவையான ரத்தத்தை பணமின்றி, பெறுவதே, குறிக்கோளாக உள்ளது. ரத்த தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X