திறப்பு விழா காணாத சுகாதார வளாகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திறப்பு விழா காணாத சுகாதார வளாகம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பென்னாகரம்: ஊட்டமலையில் திறப்பு விழா காணாத, சுகாதார வளாகத்தால், மக்களும், சுற்றுலாப்பயணிகளும் அவதியடைகின்றனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது, ஊட்டமலை. இங்கு, 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமம், ஒகேனக்கல்லுக்கு அருகே அமைந்துள்ளதால், சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். கடந்த, ஏழு ஆண்டுகளுக்கு முன், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் முழு சுகாதார இயக்கம் திட்டம் மூலம், ஐந்து லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதுவரை, பயன்பாட்டுக்கு வராமல், பூட்டியே உள்ளது. ஊட்டமலை மக்களும், சுற்றுலாப்பயணிகளும், திறந்த வெளியிலேயே இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர். 'சுகாதார வளாகத்தை புதுப்பித்து, செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை