கல்விக்கடன் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்விக்கடன் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுரை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: ''பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தினார்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த, ஆலோசனை கூட்டம் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது: நடப்பாண்டில் அதிக தொழில்முனைவோர்களுக்கு, மானிய வட்டியில் கடன் வழங்க வேண்டும். இவ்வாண்டு, கடன் இலக்கு, 10 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், மருத்துவம், இன்ஜினியரிங், பி.எஸ்சி., (விவசாயம்) நர்சிங் ஆகிய பட்டப்படிப்புகள் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, கல்விக்கடன் வழங்க, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இதில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்தானம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் அமிர்பாஷா, மகளிர் திட்ட அலுவலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை