ஏரியை ஆக்கிரமித்த கருவேலமரங்கள்: தூங்கும் மாவட்ட நிர்வாகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியை ஆக்கிரமித்த கருவேலமரங்கள்: தூங்கும் மாவட்ட நிர்வாகம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: புலிக்கரை ஏரியை ஆக்கிரமித்துள்ள, சீமைக்கருவேல மரங்களை, அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களில், சீமைக்கருவேல மரங்களை அகற்ற, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. பல்வேறு மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், சீமைக்கருவேல மரங்களை அகற்ற, நடவடிக்கை மேற்கொண்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, சில ஏரிகளில் மட்டும் பெயரளவில் மட்டுமே, சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. வேருடன் அகற்றப்படாத மரங்கள், மீண்டும் தளைத்துள்ளன. இதுகுறித்து, மக்கள் கூறியதாவது: சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில், தர்மபுரி மாவட்ட நிர்வாகம், பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பெயரளவில் மட்டும் பொக்லைன் மூலம், மரங்கள் அகற்றப்பட்டதால், மீண்டும் தளைத்துள்ளன. வேருடன் அகற்ற வேண்டும். தற்போது, மழை பெய்து வருவதால், மரங்களை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை