'மத்திய அரசின் மின்திட்டங்களால் சீரான மின்சாரம் வினியோகம்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மத்திய அரசின் மின்திட்டங்களால் சீரான மின்சாரம் வினியோகம்'

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடத்தூர்: ''மத்திய அரசின் மின்திட்டங்களால், அனைத்து பகுதி மக்களுக்கும், சீரான மின்சாரம் கிடைக்கும்,'' என, வேலூர் மண்டல முதன்மை பொறியாளர் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம், கடத்தூரில், மத்திய அரசின் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டத்தில், ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில், சோலார் பேனல் மூலம், மின்சாரம் தயாரிக்கும் பணியை, வேலூர் மண்டல முதன்மை பொறியாளர் அப்துல் ரகீம், நேற்று துவக்கி வைத்தார். அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் மண்டலத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய இடங்களில், நடப்பாண்டு, ஒருங்கிணைந்த மின்மேம்பாட்டு திட்டத்தில், 106 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு துணை மின்நிலையங்களும், 10 இடங்களில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 34 துணை மின்நிலையங்களும், 26 கூடுதல் துணை மின்நிலையங்களும், 194.83 கோடி ரூபாய் மதிப்பில், அமைக்கப்பட்டுள்ளன. உதய் திட்டம் மூலம், 19 துணை மின்நிலையம், 11 கூடுதல் துணை மின்நிலையம் என, 132 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் திட்டங்கள் மூலம், வேலூர் மண்டலத்தில், மலைப்பகுதிகள் மற்றும் குக்கிராமங்களுக்கு தரமான, சீரான மின்சாரம் கிடைக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை