சேதமடைந்த நூலக கட்டடம்: சீரமைக்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த நூலக கட்டடம்: சீரமைக்க கோரிக்கை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரூர்: 'அரூரில், சேதமடைந்துள்ள நூலக கட்டடத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வர்ணதீர்த்தத்தில், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், அரசு சார்பில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டடம் கட்டப்பட்டு, அதில், கிளை நூலகம் இயங்கி வந்தது. இதன் மேற்பகுதி சேதமடைந்ததால், கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், திரு.வி.க., நகரில் உள்ள தனியார் வாடகை கட்டடத்துக்கு, நூலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. மாடியில் நூலகம் இயங்குவதால், முதியவர்களும், மாணவ, மாணவியரும் சிரமமடைகின்றனர். நூலகம் இடமாற்றம் செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும், சேதமான நூலக கட்டடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நூலக கட்டடத்தை சுற்றி முட்புதர் நிரம்பியும், குடிமகன்கள், சமூகவிரோதிகளின் புகலிடமாகவும், நூலக கட்டடம் உள்ளது. நூலகத்துக்கு, சொந்த கட்டட வசதி இருந்தும், அதை சீரமைக்காததால், அரசின் பணம் வீணாகிறது. சேதமான நூலக கட்டடத்தை, உடனடியாக சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை