கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35,000 கனஅடி நீர் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35,000 கனஅடி நீர் திறப்பு

Updated : ஜூன் 15, 2018 | Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கபினி அணை, கர்நாடகா கனமழை,  கர்நாடகா கபினி அணை, பிலிகுண்டுலு, தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு,  கபினி தண்ணீர் திறப்பு,
Kabini Dam, Kabini Water , Karnataka heavy rain , Karnataka Kabini Dam, Biligundulu,

மேட்டூர் : கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் வயநாடு, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 84 அடியில் 80 அடியை தண்ணீர் எட்டியுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 37,000 கனஅடியாகவும், அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 35,000 கனஅடியாக உள்ளது.
இதனால் நேற்று வரை கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் விநாடிக்கு 35,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் 2 நாட்களில் கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும் என கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
16-ஜூன்-201806:38:20 IST Report Abuse
jagan தண்ணீர் தேங்கினால் கொசு வளரும் எனவே தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் இந்த நீரை கடலில் சேர்க்க ஏற்பாடு செய்வோம் ...இப்படிக்கு லஞ்சம் மட்டுமே வாங்க தெரிந்த BC MBC மற்றும் OBC அதிகாரிகள்
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
16-ஜூன்-201806:33:53 IST Report Abuse
jagan இட ஒதுக்கீட்டில் வந்த அதிகாரிகளே, உஷார், வரும் தண்ணீரை உடனடியாக கடலுக்கு திறந்து விடுங்கள்..அப்போ தான் லஞ்சம் வாங்க மட்டுமே தெரிந்த உங்களுக்கு தண்ணி லாரி லஞ்சம் வந்து சேரும்..
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
16-ஜூன்-201800:00:57 IST Report Abuse
Raghuraman Narayanan கனமழை பொழிகிறது. எங்களது அணைகள் நிரம்பி வழிகின்றன. இப்போ பிச்சை போடுகிறோம் நீங்கள் பெற்று கொள்ளுங்கள் என்பதை போல் ஒரு முதல்வர் பேசுகிறார் அதை கேட்டு ஒரு அரசியல்வாதி நடிகர் அவருக்கு நன்றி தெரிவிக்கிறார். மனசு கொதிக்கிறது. இந்த நாட்டில் நீதி மன்றங்கள் எதற்கு?
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
15-ஜூன்-201819:16:20 IST Report Abuse
bal வேற வழி...திறந்துதான் ஆகவேண்டும்....இல்லை என்றல் டாம் உடைந்து விடும்.
Rate this:
Share this comment
Cancel
n.palaniyappan - karaikal ,இந்தியா
15-ஜூன்-201816:49:04 IST Report Abuse
n.palaniyappan N.Palaniyappan Karaikall All farmers like to Cauvery water sharing management authority s its work immidiatly. We want water by Cauvery tribunal final judgement and Supreme court order. WATER SHARING EVERY MONTH RELLEASE our sharing calculated by Cauvery tribunal. It's is help to agriculture work with confident. Don't delay. It is help to our farmers life.
Rate this:
Share this comment
Cancel
AnandaRajan - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-201815:02:06 IST Report Abuse
AnandaRajan வருடா வருடம் இப்படி வரும் தண்ணீரை தேக்கி வைக்க நமக்குத் தான் அணைக்கட்டு இல்லையே. வீணாக கடலில் கலப்பதை தடுக்க முடியாது. அதற்கு எந்த முயற்சியும் நம் தலைவர்கள் எடுக்க மாட்டார்கள். ஆனால் போராட்டம் யாருக்காக? எதற்காக? நமக்கும் அக்கறை இல்லை. தண்ணீரை தேக்கி வைத்தால் நிலத்தடிநீர் உயரும். மணல் கொள்ளை அடிக்க முடியாது.
Rate this:
Share this comment
mindum vasantham - madurai,இந்தியா
15-ஜூன்-201816:30:13 IST Report Abuse
mindum vasanthamஇந்த நீர் மேட்டூர் தான் செல்லும் , மேட்டூரில் இன்னும் 20 % நீர் கூட நிரம்பவில்லை...
Rate this:
Share this comment
Sahayam - cHENNAI,இந்தியா
15-ஜூன்-201816:44:04 IST Report Abuse
Sahayamகடந்த 10 வருடமாக எவ்வளவு tmc கடலுக்கு சென்றது என கூறினால் நலம்...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-ஜூன்-201814:25:28 IST Report Abuse
ஆரூர் ரங் ராகுல் உத்தரவின் பேரில்😟 குமாரசாமி தமிழகத்துக்கு மனமுவந்து தண்ணீர் 🍺திறந்துவிட்டுள்ளார்😀. மதச்சார்பின்மைக்கு நன்றி.🤡
Rate this:
Share this comment
anuthapi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூன்-201817:44:19 IST Report Abuse
anuthapiநம்முடைய செயல் தலைவர் ராகுலிடம் பேசியத்தினாலும், கமல் குமாரசாமியிடம் பேசியதாலும் தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு இருக்கிறார்கள். எனவே மோடி ஒழிக. வாழ்க தமிழ்நாடு.இது விஷயமாக இன்று மோடியை கிண்டல் செய்து நிறைய மீம்ஸ் போடுவோம்...
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
15-ஜூன்-201813:19:48 IST Report Abuse
mindum vasantham ORU நாளைக்கு நெருக்கி 3 TMC தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது , இப்படி இன்னும் 25 நாட்கள் வந்தாலே மேட்டூர் 4 ஆண்டுகளுக்கு பின் நிரம்பும் , தமிழகம் முழுவது மகிழ்ச்சி பரவும் , தமிழகம் குதூகலிக்கும் , இடப்பாடிக்கு யோகம் தான் ........ நான் என்றும் சொல்வது போல் தர்மபுரியில் இருந்து , ERODE , நீலகிரி , கோவை , திண்டுக்கல் ,முதலிய காடுகளை பாதுகாக்க வேண்டும் இது காவேரி போல் ஒரு பெரிய நீர் வளத்தை கொடுக்க கூடிய பகுதி தனியார் தோட்டம் ,ரிசார்ட் களை தவிர்க்க வேண்டும்,உச்ச கோர்ட் இதை அறிவுறுத்தியுள்ளது , மேலும் ஒரு எடுத்துக்காட்டு காடு வளம் அதிகம் உள்ள தாமிரபரணி இன்னும் உயிர்ப்புடன் உள்ளது , வைகை தான் இருக்கிறது ,மேலும் மாஞ்சோலை காடுகளை பாதுகாத்தால் இன்னும் நீர்வளம் கூடும்
Rate this:
Share this comment
Cancel
NKR rekha - Karur,இந்தியா
15-ஜூன்-201812:40:34 IST Report Abuse
NKR rekha சாமிக்கு நன்றி குமாரசாமிக்கு நன்றி
Rate this:
Share this comment
Sabari - Tanjore,இந்தியா
15-ஜூன்-201814:19:15 IST Report Abuse
SabariNKR rekha - Karur,...சாமிக்கு நன்றி சொல்லலாம்...ஆனால் குமாரசாமிக்கு எதற்கு நன்றி? குமாரசாமி என்ன கர்நாடகாவுக்கு இல்லாமல் தமிழகத்திற்கு திறந்துவிட்டாரா? அதிக மழையினால் உபரிநீர் மட்டுமே திறந்துவிப்படுகிறது என்பதை செய்திகளில் பார்க்கவும். கர்நாடகக்காரன் தனக்கு தேவையானது போக அதிகம் உள்ளதை மட்டுமே திறந்துவிடுவான். அங்கே உள்ள அனைத்து கட்சிக்காரனும் துரோகி என்பதில் மாற்று கருத்து இல்லை. உச்சநீதி நீதிமன்றம் தண்ணீர் திறந்துவிடச்சொன்னதற்கு தமிழகத்தின் 45 பேருந்துகளை தீவைத்து எரித்தவன் கர்நாடகத்துக்காரன். மனிதத்தன்மை கிலோ என்னவிலை என்று கேட்பான்....
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
15-ஜூன்-201817:30:23 IST Report Abuse
sankarசண்டை போட்டுக்கிட்டேய் இருக்க கூடாது இதைத்தான் தலைவர் ரஜினி சொன்னாரு . தண்ணி வருதுல்ல . மழை தண்ணீர் என்பதால் தமிழக நெல்லுக்கு விளையாம போயிருமா . பழனி முருகனுக்கு அரோகரா குமாராச்சாமியாய் கொடுத்து பழனி சாமியை வாங்கி கொள்கிறார் முருகன்...
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-ஜூன்-201811:56:28 IST Report Abuse
Kuppuswamykesavan /////Arun Prakash - Chennai,இந்தியா 15-ஜூன்-2018 11:08 இன்னும் கர்நாடகா காவேரி மேலாண்மை வாரியத்துக்கு உறுப்பினர் பரிந்துரை பண்ணல, எங்க போனாங்க ஸ்டாலின், வைகோ, திருநா,திருமா,சீமான்,ராம்தாஸ் அப்புறம் பேர் புதுசு புதுசா வச்சு காவேரி போராட்டம் பண்றவங்க...அங்க நடக்கிறது காங்கிரஸ் ஆட்சி அதனால் இந்த மௌனமா. இவுங்களை நம்புற கூட்டம் இன்னும் இருக்கு, அதான் தமிழ்நாடு.///// - அற்புதமான கருத்துங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை