ஈரோட்டில் ராம்ஜிநகர் கொள்ளையர் நடமாட்டம்: 3 கடைகளில் திருட்டு; வியாபாரிகளே உஷார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் ராம்ஜிநகர் கொள்ளையர் நடமாட்டம்: 3 கடைகளில் திருட்டு; வியாபாரிகளே உஷார்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், மூன்று கடைகளில் புகுந்த ஆசாமிகள், ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன், கம்ப்யூட்டர், ஹார்டு டிஸ்க்கையும் அள்ளிச் சென்றனர்.
ஈரோடு, டீச்சர்ஸ் காலனியை அடுத்த, உழவன் நகரை சேர்ந்தவர் சரவணன், 33; பழையபாளையத்தில் துணிக்கடை நடத்தி வருகிறார். மேலும் செருப்பு மற்றும் ஹேண்ட்பேக், சூட்கேஸ் விற்கும் கடையும் வைத்துள்ளார். இந்த மூன்று கடைகளும், தொடர்ச்சியாக உள்ளது. நேற்று காலை, வழக்கம்போல் சரவணன், கடை திறக்கச் சென்றார். உள்ளே சென்றபோது, பொருட்கள் சிதறி கிடந்தன. வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தந்தார். இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையிலான போலீசார், விசாரணை நடத்தினர். தகரத்தால் ஆன மேற்கூரை, தெர்மாகோலை உடைத்து, திருடர்கள் கடைக்குள் புகுந்துள்ளனர். மூன்று கடைகளுக்கும் செல்ல, கடையின் உட்புறம் ஒரு வழி இருந்தது. அதன் மூலம் மூன்று கடைகளிலும் கைவரிசை காட்டியுள்ளனர். ஒரு லட்ச ரூபாயை, திருடி சென்றனர். கடையில் 'சிசிடிவி' காமிரா பொருத்தப்பட்டிருந்தது. அடையாளத்தை காட்டிக் கொடுத்துவிடும் என்பதால், கம்ப்யூட்டர், ஹார்டு டிஸ்க்குகளையும், எடுத்துச் சென்றனர். திருட்டில், 'திருச்சி, ராம்ஜிநகர் கொள்ளை கும்பல் ஈடுபட்டிருக்கலாம்' என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

'அறிவுரையை கேட்கல': கடை திறப்பு விழாவின் போதே, சரவணனின், போலீஸ் நண்பர்கள் சிலர், தகர ஷீட்டை மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அவர், அதை செய்யவில்லை. இந்நிலையில்தான் திருட்டு நடந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X