எஸ்.பி., அலுவலகத்தில் தமிழுக்கு 'கெட்-அவுட்?' ஆங்கில வழிகாட்டி பலகையால் அதிர்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி., அலுவலகத்தில் தமிழுக்கு 'கெட்-அவுட்?' ஆங்கில வழிகாட்டி பலகையால் அதிர்ச்சி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: எஸ்.பி., அலுவலகத்தில், ஆங்கில வழிகாட்டி தகவல் பலகையால், பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில், மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு, டவுன் டி.எஸ்.பி., அலுவலகம் செல்ல, இரு வழித்தடம் இருந்தது. இதில் காவலர் சிற்றுண்டியை ஒட்டிய வழித்தடம் அடைக்கப்பட்டுள்ளது. ஒரு வழித்தடம் வழியாகவே மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அலுவலக வளாகத்தில், எந்தெந்த பிரிவு அலுவலகம், எங்கெங்கு உள்ளதென்பதை தெரிவிக்கும் வகையில், வழிகாட்டி தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பலகை ஆங்கிலத்தில் இருப்பதால், சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கிராமப்புற, மலைவாழ் மக்கள், அதிகளவில் எஸ்.பி., அலுவலகத்துக்கு புகாரளிக்க வருகின்றனர். ஆங்கில வழிகாட்டி தகவல் பலகையால், அவர்கள் சரியான அலுவலகத்துக்கு செல்ல முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. எனவே, தமிழில் வைக்க வேண்டும். அரசு அலுவலகங்களில், தமிழுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற சூழலில், அரைகுறையாக, அதிகாரிகளை திருப்திப்படுத்த, அவசர கதியில் ஆங்கில மோகத்தில் வைக்கப்பட்ட தகவல் பலகையை அகற்றி, தமிழில் விரிவாக, தெளிவாக எழுதி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X