கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் ரூ.3.76 கோடி வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் ரூ.3.76 கோடி வழங்கல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில், 1,573 மாணவ, மாணவியருக்கு, 3.76 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
பெருந்துறை கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில், மாணவ, மாணவியருக்கு, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா கல்லூரியில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் பரமேஸ்வரி லிங்கமூர்த்தி தலைமை வகித்தார். பொருளாளர் கிருஷ்ணன் வரவேற்றார். பெருந்துறை டி.எஸ்.பி., ராஜாகுமார், ஊக்கத்தொகைக்கான காசோலை வழங்கினார். கொங்கு இன்ஜினியரிங், பாலிடெக்னிக், கலை அறிவியல், கட்டடக்கலை கல்லூரிகள், கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூட மாணவ, மாணவியருக்கு, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதிக மதிப்பெண் பெற்ற, 662 பேருக்கு, ஒரு கோடியே, இரண்டு லட்சத்து, 77 ஆயிரம் ரூபாய்; விளையாட்டுத்துறையில், 119 பேருக்கு, 85 லட்சத்து, 11 ஆயிரம் ரூபாய்; அரசு பள்ளிகளை சேர்ந்த, 101 பேருக்கு, 83 லட்சத்து, 81 ஆயிரம் ரூபாய்; கொங்கு கல்வி நிறுவன அலுவலர்களின் குழந்தைகள் படிப்புக்காக, 133 பேருக்கு, 36 லட்சத்து, 69 ஆயிரம் ரூபாய்; பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற, 98 பேருக்கு, 23 லட்சத்து, 73 ஆயிரம் ரூபாய் என, 1,573 மாணவ, மாணவியருக்கு, மூன்று கோடியே, 76 லட்சத்து, 94 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை