அரசுப்பள்ளி சமையலறை, கழிப்பறையில் விரிசல்: அந்தியூர் அருகே பெற்றோர் மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசுப்பள்ளி சமையலறை, கழிப்பறையில் விரிசல்: அந்தியூர் அருகே பெற்றோர் மறியல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அந்தியூர்: அரசுப்பள்ளி சமையலறை, கழிப்பறையில் விரிசலை சரி செய்யக்கோரி, பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அந்தியூர் அருகேயுள்ள, தவுட்டுப்பாளையத்தில், பிரம்மதேசம் சாலையில், அரசு துவக்கப்பள்ளி கட்டடத்தில், நடுநிலைப்பள்ளி செயல்பட்டது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்ததால், இடநெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, தவுட்டுப்பாளையம், ஏ.கே.பழனியப்பா வீதியில், நடுநிலைப்பள்ளிக்காக, 45 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக பணி இழுத்தடிக்கப்பட்டு, நடப்பாண்டு ஒருவழியாக முடிந்தது. கடந்த, 11ல் பள்ளிக்கூடம் செயல்பாட்டுக்கு வந்தது. பள்ளியில், 300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.நேற்று பள்ளிக்கு, பெற்றோருடன் மாணவர்கள் வந்தனர். விளையாட்டு மைதானத்தில், மதுபாட்டில்கள் உடைந்து, சிதறிக் கிடந்தன. கழிப்பறை, சமையலறை கட்டடத்தில் விரிசல் காணப்பட்டது. இதைப் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைக் கண்டித்து, காலை, 12:00 மணியளவில், கரட்டுப்பாளையம் - அந்தியூர் சாலையில், 10?க்கும் மேற்பட்டோர், மறியலில் ஈடுபட்டனர். அந்தியூர் போலீசார், அந்தியூர் பி.டி.ஓ., முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கையை, மக்களிடம் மனுவாக எழுதி பெற்றனர். நடவடிக்கை எடுக்கும் வரை, துவக்கப்பள்ளி கட்டடத்திலேயே, மாணவர்கள் படிக்கட்டும் என்றனர். இதையடுத்து, மறியலை கைவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை