காதல் திருமண ஜோடியை கடத்திய பெற்றோர்: 'திக்திக்' வழக்கில் நான்கு பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் திருமண ஜோடியை கடத்திய பெற்றோர்: 'திக்திக்' வழக்கில் நான்கு பேர் கைது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோபி: காதல் திருமணம் செய்த தம்பதியரை, கடத்திய வழக்கில், உறவினர்கள் நான்கு பேரை, கோபி போலீசார் கைது செய்தனர்.
கோபி, அளுக்குளி அருகே, அம்மன் நகரை சேர்ந்தவர் வினோத்குமார், 23, பனியன் கம்பெனி தொழிலாளி; அதே பகுதி காசியூரை சேர்ந்தவர் ஆர்த்தி, 20; வெவ்வேறு பிரிவை சேர்ந்த இவர்கள் காதலித்தனர். எட்டு மாதங்களுக்கு முன், திருமணம் செய்தனர். கெட்டிசெவியூர் அருகே, கலைமகள் வீதியில் வசித்து வருகின்றனர்.கடந்த, 12ல், இருவரையும் காரில் வந்த, ஆர்த்தியின் தந்தை சண்முகம் மற்றும் சிலர் கடத்தி சென்றனர். வினோத்குமாரின் தாய் புகாரின்படி, கோபி போலீசார், தம்பதியரை தேடி வந்தனர். இந்நிலையில், கோபி அருகே பெருந்தலையூர் என்ற இடத்தில், நேற்று முன்தினம் இரவு, காயங்களுடன் வினோத்குமார் மீட்கப்பட்டார். கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். போலீசார் தீவிரமாக தேடியதால், ஆர்த்தியின் பெற்றோர், சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்:1ல், நீதிபதி ராஜவேலு முன்னிலையில், ஆர்த்தியை நேற்று ஆஜர்படுத்தினர். வினோத்குமாருடன் செல்வதாக, அவர் தெரிவித்தார். இதனிடையே கடத்தலுக்கு உடந்தையாக இருந்த, ஆர்த்தியின் சித்தி விஜயலட்சுமி, சகோதரர் விஷ்ணு பிரசாத், சித்தப்பாக்கள் வேலுசாமி, கொடியரசு ஆகியோரை, கோபி போலீசார், நேற்று மாலை கைது செய்தனர். நால்வரையும் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள, ஆர்த்தியின் தந்தை உட்பட சிலரை, போலீசார் தேடி வருகின்றனர். மகள் காதல் திருமணம் செய்தது பிடிக்காமல், பெற்றோரே உறவினர்களுடன் இணைந்து, கடத்தியதாக, போலீசார் தெரிவித்தனர்.

முகாமிட்ட எஸ்.பி.,: காதல் ஜோடி திருமண பிரச்னை விஸ்வரூபம் எடுத்து, சட்டம்-ஒழுங்கு பிரச்னை வந்து விடக்கூடாது என்பதற்காக, எஸ்.பி., சக்தி கணேசன் நேற்று காலை முதலே, கோபியில் முகாமிட்டிருந்தார். இந்நிலையில்தான் போலீசாரின் ஒருங்கிணைந்த தீவிர தேடுதலில், அனைத்து விவகாரமும், முடிவுக்கு வந்ததாக, போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X