8 பவுன் தாலிக்கொடி பறிப்பு: சத்தியில் பெண்கள் கடும் பீதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

8 பவுன் தாலிக்கொடி பறிப்பு: சத்தியில் பெண்கள் கடும் பீதி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சத்தியமங்கலம்: தொடர் நகை பறிப்பால், சத்தியமங்கலம் பெண்கள், பீதி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம், ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் தங்கவேல், 60; பைனான்ஸ் தொழில் செய்கிறார். இவர் மனைவி தமயந்தி, 57; இருவரும் நேற்று காலை, 6:45மணியளவில் வழக்கம்போல், கூத்தனூர் சாலையில் நடைபயிற்சி சென்றனர். அப்போது, பைக்கில் வந்த இருவரில் ஒருவன், தமயந்தி போட்டிருந்த, 10 பவுன் தாலிக்கொடியை பறித்தான். நிலைதடுமாறி விழுந்த அவர், நகையை ஒரு கையில் பிடித்தபடி சத்தம் போட்டபடியே போராடினார். திருடனோ தரதரவென இழுத்து சென்று, நகையை பறித்து கொண்டு, பைக்கில் ஏறி தப்பினான். அவர் கையில் பிடித்ததில், இரண்டு பவுன் அளவு நகை, அவரிடம் சிக்கியது. பலத்த காயமடைந்த தமயந்தி, கோபி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன் கெஞ்சனூர் பகுதியில், இதேபோல் ஒரு பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது. தொடர் சம்பவத்தால், பெண்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X