மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 8,895 யூனிட் ரத்தம் சேகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 8,895 யூனிட் ரத்தம் சேகரிப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: ''ஈரோடு மாவட்டத்தில், கடந்த ஆண்டில், 105 ரத்த தான முகாம்களில், 8,895 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது,'' என்று, டி.ஆர்.ஓ., கவிதா பேசினார்.
உலக ரத்த கொடையாளர்கள் தின விழா, ஈரோடு அரசு மருத்துவமனையில், நேற்று கொண்டாடப்பட்டது. டி.ஆர்.ஓ., கவிதா தலைமை வகித்தார். இதையொட்டி, நர்சிங் கல்லூரி மாணவியரின், ரத்த தான விழிப்புணர்வு மனித சங்கிலி, கல்லூரி மாணவர்களின் ரத்த தான நிகழ்ச்சியை, தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., கவிதா பேசியதாவது: உடல் பலம், மன பலம் இருப்பவர்கள் தான், ரத்த தானம் செய்ய முடியும். இதில் ஏதாவது ஒன்றில்லை என்றாலும், ரத்த தானம் அளிப்பது சிரமம். ஈரோடு மாவட்டத்தில், இரண்டு அரசு ரத்த வங்கிகள், எட்டு தனியார் ரத்த வங்கியும் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு மாவட்டத்தில், 105 ரத்த தான முகாம்கள் நடத்தி, 8,895 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார். நிறைவில், அதிகமுறை ரத்த தானம் செய்த, 60 பேர் பாராட்டப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை