ஆழ்துளை கிணறுகள் சீரமைக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆழ்துளை கிணறுகள் சீரமைக்க வலியுறுத்தல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில், நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்துள்ளதால், செயல்படாத ஆழ்துளை கிணறுகளை சீரமைக்க வேண்டும். பள்ளிபாளையம் ஒன்றியத்தில், 15 பஞ்சாயத்துகளிலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. போதிய மழை இல்லாததால், கோடைகாலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, பெரும்பாலானவை வறண்டன. இதுகுறித்து, அதிகாரிகளும் கணக்கெடுத்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக, கோடைமழை பெய்தது. தொடர்ந்து, தென்மேற்கு பருவமழையும் துவங்கியுள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஏரி, குளம், ஓடை, கிணறு போன்று நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது; நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து, ஆழ்துளை கிணறுகளில், தண்ணீர் வர வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், செயல்படாத ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை