4,000 மரக்கன்றுகள் மக்களுக்கு வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

4,000 மரக்கன்றுகள் மக்களுக்கு வழங்கல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, சிமென்ட் ஆலை நிர்வாகம் சார்பில், பொதுமக்களுக்கு, 4,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. குமாரபாளையம் அருகே, சங்கர் சிமென்ட் ஆலை நிர்வாகம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாத்தல் என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம், பேரணி, பேச்சு, கட்டுரை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இணை தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். 'பிளாஸ்டிக் மாசுபாடுகள் வெல்லுதல்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ஜெயலட்சுமி பேசினார். தொடர்ந்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பில், ஆலை வளாகத்தில், 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. எரிபொருள் சிக்கனம், சுற்றுச்சூழல் மாசை தவிர்த்தல், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக, சைக்கிள் பயன்பாடு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மக்களுக்கு, 4,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X