'குடிநீர் தொட்டி வளாகத்தில் அத்துமீறினால் நடவடிக்கை'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'குடிநீர் தொட்டி வளாகத்தில் அத்துமீறினால் நடவடிக்கை'

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: 'ஆவாரங்காடு பகுதியில், மேல்நிலை தொட்டி வளாகத்தின் உள்ளே, அன்னியர் சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. பள்ளிபாளையம் அடுத்த, ஆவாரங்காடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியைச் சுற்றிலும் பாதுகாப்பு சுவர் மற்றும் கேட் அமைக்கப்பட்டுள்ளது. வளாகத்தின் உள்ளே, சிலர் அத்துமீறி செல்கின்றனர். தொட்டி மீது ஏறுகின்றனர்; மது அருந்துகின்றனர். அருகில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், 'குடிநீர் மேல்நிலைத் தொட்டி பாதுகாக்கப்பட்ட இடம். அன்னியர் யாரும் உள்ளே வரக்கூடாது. மீறினால், காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நகராட்சி நிர்வாகம் சார்பில், அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், 'இரவில் போலீசார் இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை