விவசாய நிலத்திற்கான வழித்தடம்: மீட்டுத்தர சப்-கலெக்டரிடம் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய நிலத்திற்கான வழித்தடம்: மீட்டுத்தர சப்-கலெக்டரிடம் மனு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: 'தங்கள் விவசாய நிலத்திற்கு செல்லும் வழித்தடத்தை மீட்டுத்தர வேண்டும்' என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேந்தமங்கலம் அடுத்த, 30 பள்ளிப்பட்டி கிராம மக்கள், நாமக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்து, சப் - கலெக்டர் கிராந்திகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதன் விபரம்: எங்கள் கிராமத்தில் பழனியப்பார்கோவில் சாலை, புங்கமரம் அருகில் இருந்து வடபுறமாக எட்டிக்குட்டை மற்றும் பொன்காளியம்மன்கோவில் வரை செல்லும் வண்டிப் பாதை வழியாக, விவசாய நிலங்களுக்கு சென்று வருகிறோம். 200 ஆண்டு காலமாக, அந்த பாதையை பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், பாதை தொடங்கும் இடத்தை, அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் போலியான ஆவணம் தயாரித்து, தன் மனைவி பெயரில் பத்திரம் எழுதி வைத்துள்ளார். மேலும், 'யாரும் இந்த வழியாக செல்லக்கூடாது' என்கிறார். இதனால், விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போலி ஆவணம் தயாரித்து, வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள நபர் மீது நடவடிக்கையெடுத்து, வண்டிப்பாதை உரிமையை மீட்டுத்தர, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை