மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வருகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வருகை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: பார்லிமென்ட் தேர்தலுக்கு பயன்படுத்தும் வகையில், புதிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. வரும், 2019ல் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம்(தனி), ப.வேலூர், குமாரபாளையம், சேந்தமங்கலம்(எஸ்.டி.,) ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆறு தொகுதிகளிலும், 13.60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 1,569 ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு இயந்திரங்கள், நாமக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு லாரிகளில் நேற்று வந்தன. அவை, பதிவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதுகுறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து, புதிய வடிவமைப்பில், 3,970 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 2,160 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் வந்துள்ளன. தொழில் நுட்ப வல்லுனர் குழுவினர், இவற்றை விரைவில் சோதனை செய்வர். இதில் பழுதானவை நீக்கப்படும். இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்வாறு கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை