மண் குவியலால் விபத்து: நடவடிக்கை அவசியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மண் குவியலால் விபத்து: நடவடிக்கை அவசியம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: எஸ்.பி.பி.காலனி சாலையில், அதிகளவு மண் குவியல் உள்ளதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையம் அடுத்த, எஸ்.பி.பி.காலனியில் இருந்து, அண்ணாநகர் செல்லும் சாலையோரத்தில் மண் குவியல் உள்ளது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். டூவீலரில் வருவோர், இந்த இடத்தில் எச்சரிக்கையாக, பொறுமையாக வரவேண்டும் இல்லையெனில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள், மண் குவியலை அகற்றிவிட்டு, சாலையோரத்தில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து, இந்தவழியாக தினந்தோறும் செல்லும் சக்திவேல் கூறியதாவது: கடந்த ஒரு மாதமாக மண் குவியல் அதிகமாகி விட்டது. ஒரு வாரத்திற்கு முன், டூவீலரில் சென்ற ஒருவர் சறுக்கி விழுந்து விட்டார். இந்த இடத்தில் வரும்போது, விபத்து ஏற்படுமோ என, அச்சம் வந்து விட்டது. இதை உடனடியாக அகற்ற, நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை