அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : ஜூன் 15, 2018
Advertisement

பழுதடைந்த குடிநீர் குழாய்: ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரியில் இருந்து, பூசாரிப்பாளையம் செல்லும் வழியில், வயல்பகுதியில் சாலையோரம் குடிநீர் குழாய் உள்ளது. இதில், தற்போது தண்ணீர் வருவதில்லை. இதனால், விவசாயிகள் குடிநீர் கூட கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடிநீர் பைப்பை உடனடியாக சரி செய்து, தொடர்ந்து தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும். வறட்சி காலத்தில் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.
குண்டும், குழியுமான சாலையால் அவதி: மல்லசமுத்திரம் ஒன்றியம், பருத்திபள்ளி பஞ்., சோமணம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, பல ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. தற்போது, சாலை குண்டும், குழியுமாக உள்ளது. வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இரவுநேரங்களில், புதிதாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். இதுகுறித்து, பகுதியினர் பலமுறை மனுஅளித்தும் நடவடிக்கை இல்லை. சாலையை சரி செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்புவேலி அமைக்கப்படுமா? எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்பிலியில் செல்லும் திருமணிமுத்தாற்றில், 25 ஆண்டுகளுக்கு முன், பாலம் அமைக்கப்பட்டது. தற்போது, பாலத்தின் தடுப்புவேலிகள் சேதாரமாகியுள்ளன. போதிய வெளிச்சமில்லாததால், இரவு நேரங்களில் வாகனஓட்டிகள் தவறி, ஆற்றுக்குள் விழுந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தடுப்புவேலிகளை சரிசெய்து, மின்விளக்குகள் அமைத்து, எச்சரிக்கை பலகை வைக்க, பொதுப்பணித்துறை நிர்வாகம் முன்வர வேண்டும்.

பஸ் ஸ்டாண்டில் இடிந்த கழிப்பிடம்: குமாரபாளையம், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. இதன் சுவர், கான்கிரீட் தளங்கள் மிகவும் சேதமடைந்து, எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. தற்காலிக மராமத்து பணிகளும் செய்யப்படாமல் உள்ளது. பயணிகள், மக்கள் அச்சமடைந்துள்ளனர். அசம்பாவிதம் நடக்கும் முன், கழிப்பிடத்தை இடித்து, புதிதாக கட்ட நடவடிக்கை மேற்கொள்ள, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

சாக்கடையால் சுகாதார சீர்கேடு: ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி, மேட்டுத்தெருவில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் இருந்து வரும் சாக்கடை, ஆத்தூர் பிரதான சாலையில் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதற்கு மேல் செல்ல கால்வாய் வசதி இல்லை. துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. கொசு உற்பத்தி அதிகரிப்பால், தொற்றுநோய் பரவி வருகிறது. எனவே, கழிவுநீரை அப்புறப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டிது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X