மாறி மாறி வந்த விடுமுறை அறிவிப்பு: மாணவர்கள் ஏமாற்றம்; ஆசிரியர்கள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாறி மாறி வந்த விடுமுறை அறிவிப்பு: மாணவர்கள் ஏமாற்றம்; ஆசிரியர்கள் அவதி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: மாறி மாறி வந்த, ரம்ஜான் விடுமுறை அறிவிப்பால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ரம்ஜான் மாதத்தில், மூன்றாம் பிறையன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டியை கொண்டாடுகின்றனர். பிறை தெரிவதை பொறுத்தே நோன்பு திறப்பதால், விடுமுறை தேதியை சரியாக கணிக்கமுடிவதில்லை. இந்நிலையில், தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை விடுமுறை, இன்று விடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு, நேற்று மதியம், 3:00 மணிவரை வராததால், நாளைதான் விடுமுறை என, பள்ளி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், மாலை, 4:30 மணிக்கு, 'இன்று ரம்ஜான் விடுமுறை' என தெரிவிக்கப்பட்டதால், கல்வி நிறுவனங்கள் விடுமுறையை அறிவித்தன. இரவு, 8:00 மணியளவில், ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை (நாளை) என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதே வேளையில், தனியார் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களை தொடர்பு கொண்டு, மாணவர்கள் அனைவருக்கும், இன்று பள்ளி வழக்கம்போல் செயல்படும் என, தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் விடுமுறை ரத்தானதை தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை