பார்லிமென்ட் தேர்தல் பணி துவக்கம்: நாளை பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பார்லிமென்ட் தேர்தல் பணி துவக்கம்: நாளை பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: பார்லிமென்ட் தேர்தலுக்கான பணியை தமிழக, பா.ஜ., தொடங்கியுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும், சட்டசபை தொகுதி வாரியாக நிர்வாகிகள் கூட்டம், நாளை நடக்கவுள்ளது.
பார்லிமென்ட் தேர்தல், 2019ல் நடக்கவுள்ளது. தமிழக, பா.ஜ., தற்போதே தேர்தல் பணியை தொடங்கி விட்டது. ஒன்றியம், பேரூர், நகர அமைப்புகளுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுத்துள்ளனர். சட்டசபை, பார்லிமென்ட், ஓட்டுச்சாவடிக்கு பொறுப்பாளர்களை அறிவித்துள்ளனர். ஐந்து ஓட்டுச்சாவடிகளை இணைத்து, சக்தி கேந்திரம்; 20 ஓட்டுச்சாவடிகளை இணைத்து, மகா சக்தி கேந்திரம் என பிரித்துள்ளனர். பொறுப்பாளர்கள், தங்களுக்கு கீழுள்ள வாக்காளர்கள் எண்ணிக்கையை பொறுத்து, 20 முதல், 30 பேர் கொண்ட பூத் கமிட்டியை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை தமிழகம் முழுவதும் சட்டசபை தொகுதிதோறும், பூத் பொறுப்பாளர்களுக்கான கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: நாளை, மாநிலம் முழுவதும் தேர்தல் பொறுப்பாளர்களுக்கான கூட்டம், சட்டசபை தொகுதி வாரியாக ஒரே சமயத்தில் நடக்கவுள்ளது. பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தால் கிடைத்துள்ள முதலீடுகள், மலிவு விலை மருந்து, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், பயிர் மட்டும் விபத்து காப்பீடு உள்ளிட்ட அனைத்து திட்டங்கள் குறித்தும், பொறுப்பாளர்கள் விளக்கும் வகையில் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை